கேரளத்தில் கடன் சுமை காரணமாக மாநில விருது வென்ற விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள செருபுழாவில் 62 வயதான விவசாயி கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
பலியானவர் செருபுழா அருகே உள்ள இடவரத்தைச் சேர்ந்த அம்பட்டு எலியாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்த எலியாஸ், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அவரது பண்ணையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
பின்னர் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பலியானார்.
பல லட்சம் ரூபாய் அளவிலான நிதிச் சுமைகளே அவரை இந்த விபரீத முடிவை எடுக்கத் தூண்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எலியாஸ், கடந்த நாற்பது ஆண்டுகளாக கண்ணூர் மற்றும் அண்டை மாவட்டமான காசர்கோடு மலைப்பகுதிகளில் குத்தகை நிலத்தில் காய்கறி பயிரிட்டு வந்தார்.
இந்த பருவத்திலும் அவர் சுமார் 2,500 வாழைக்கன்றுகளை நட்டியிருந்தார். ஆனால் விளைச்சலுக்கு ஏற்ற வருமானம் கிடைக்காததால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
Summary
A 62-year-old award-winning farmer allegedly died by suicide due to mounting financial debt at Cherupuzha in this district, police said.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

பும்ரா, ஹேசில்வுட் பயமில்லை: கேக் வெட்ட நேரமில்லாமல் தூங்கச் சென்ற வைபவ் சூர்யவன்ஷி!

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்! முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி சிறப்பு நேர்காணல்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


