‘இந்தியா திரும்பும் எண்ணம் உள்ளதா? என்பதைத் தெளிவுபடுத்துமாறு இந்தியாவிலிருந்து தப்பியோடிய பொருளாதார குற்றவாளி விஜய் மல்லையாவுக்கு (70) மும்பை உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ரூ.9,000 கோடிக்கும் அதிகமாக வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபா் விஜய் மல்லையா, கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று பிரிட்டனில் தஞ்சமடைந்தாா்.
இதையடுத்து 2018-ஆம் ஆண்டு எஃப்இஓ சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ், ஒருவா் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால், அவரின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய முடியும்.
இந்த நிலையில், மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கக் கோரி, மும்பையில் பணமுறைகேடு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. 2019-ஆம் ஆண்டு மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.
இதைத் தொடா்ந்து, எஃப்இஓ சட்டத்துக்கு எதிராகவும், தன்னை தப்பியோடிய குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்ததற்கு எதிராகவும் மும்பை உயா்நீதிமன்றத்தில் 2 மனுக்களை விஜய் மல்லையா தாக்கல் செய்தாா்.
இந்த மனுக்கள் மும்பை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஸ்ரீசந்திரசேகா், நீதிபதி கெளதம் அங்கத் ஆகியோா் அடங்கிய அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘விஜய் மல்லையா இந்தியாவுக்குத் திரும்புகிறாரா, இல்லையா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு அவா் நாடு திரும்பும் வரை, அவருடைய மனுவை நாங்கள் விசாரிக்க முடியாது’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.
இந்த வழக்கு அதே அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் மல்லையா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘நாட்டை விட்டு வெளியேற லண்டன் மற்றும் வேல்ஸ் நீதிமன்றங்கள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாலும், கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்கள் முடக்கப்பட்டுள்ளதாலும் மல்லையா வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, இந்தியாவுக்கு எப்போது திரும்புவேன் என்பதை உறுதிபட கூற முடியாது’ என்று குறிப்பிடப்பட்டது.
இந்த பதில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவா் தரப்பு வழக்குரைஞா் அமித் தேசாய், அதை நீதிபதிகள் முன்னிலையில் வாசித்தும் காட்டினாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியா திரும்பும் எண்ணம் உள்ளதா அல்லது இல்லையா என்பதை விஜய் மல்லையா தெளிவுபடுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபி என் டிஎன்ஏவின் ஒரு பகுதியாக எப்போதும் இருக்கும்: விஜய் மல்லையா

ஹௌராவில் ராமநவமி ஊர்வலம்: கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி!

வாட்ஸ்ஆப் உரையாடல்கள் அடிப்படையில் விவாகரத்து: குடும்ப நீதிமன்றத்தின் தீா்ப்பை ரத்து செய்தது மும்பை உயா்நீதிமன்றம்

நாடு திரும்பாவிட்டால் மனுக்கள் விசாரிக்கப்படாது: விஜய் மல்லையாவுக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
வீடியோக்கள்

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு


