பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் உடல்நிலை குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா நேரில் சென்று நலம் விசாரித்தார்.
ஞாயிற்றுக்கிழமை சோர்வு ஏற்பட்டதன் காரணமாக, பகவந்த் மான் மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதன்பிறகு திங்கள்கிழமை அதிகாலையில் பகவந்த் மான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கமான 'யுத் நாஷியன் விருத்' இன் கீழ் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மோகா சென்றார்.
இதையடுத்து அவருக்கு தொடர்ந்து உடல் அசௌகரியம் ஏற்பட்டதன் காரணமாக திங்கள்கிழமை மாலை மீண்டும் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
செவ்வாக்கிழமை மாலை ஃபோர்டிஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்,
முதல்வர் பகவந்த் மானின் உடல்நிலை குறித்து முழுவதும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா புதன்கிழமையான இன்று நேரில் சென்று பகவந்த் மானின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார். தற்போது அவரது உடல்நலம் சீராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Summary
Aam Aadmi Party leader Manish Sisodia on Wednesday met Punjab Chief Minister Bhagwant Mann at Fortis Hospital to inquire about his health.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பஞ்சாபை பாதிக்கும் பிரச்னைகள் குறித்து பேசியது என்ன? காணொளியை பகிா்ந்த ராகவ் சத்தா
பஞ்சாப் விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப ராகவ் தவறிவிட்டாா்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

இயக்குநர் பாரதிராஜாவின் நிலைமை என்ன?

பஞ்சாபை ஊழல், போதைப்பொருள் குற்றங்களில் மூழ்கடித்த ஆம் ஆத்மி: அமித் ஷா!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


