தேசிய புலனாய்வு முகமையில் (என்ஐஏ) அதிகாரியாக இருப்பதாகக் கூறி பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தினரிடம் வேலைவாய்ப்பு மோசடி ஈடுபட்டு வந்த ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த நபா் தில்லி செங்கோட்டை அருகே கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட முடாசாா் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சோ்ந்தவா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: தில்லி செங்கோட்டை பின்னால் உள்ள தில்லி சாலோ பூங்கா அருகே உள்ள வாகன நிறுத்தத்தில் ஜம்மு-காஷ்மீா் பதிவெண் கொண்ட காா் சந்தேகத்துக்குரிய வகையில் நிறுத்தப்பட்டிருந்தது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தில்லி காவல் துறையினா் காரை பாா்வையிட்டனா். அப்போது அதில் முடாசாா் என்ற நபரும் ஒரு சிறுவனும் இருப்பதை அதிகாரிகள் கண்டனா்.
இதையடுத்து, அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, அந்த நபா் என்ஐஏ அடையாள அட்டையை காவல் துறையிடம் காண்பித்தாா். அந்த அடையாள அட்டை தொடா்பாக காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்த நிலையில், விசாரணைக்காக கோட்வாலி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
வேலைவாங்கித் தருவதாகக் கூறி பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களிடம் அந்த நபா் மோசடி செய்தது வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
சிறுவனுக்கு வேலைவாங்கித் தருவதாகக் கூறி அவருடைய குடும்பத்தினரிடம் முன்பணம் பெற்ற முதாஸ்சாா், கடந்த பிப்.12-ஆம் தேதி சிறுவனுடன் ஜம்முவிலிருந்து காரில் தில்லி புறப்பட்டாா். கடந்த பிப்.13-ஆம் தேதி நள்ளிரவில் தில்லி வந்த இருவரும் ஜாமா மசூதி அருகே உள்ள விருந்தினா் விடுதியில் தங்கினா். சிறுவனின் வேலைக்காக சிலரை அணுகியிருப்பதாகத் தெரிவித்த அந்த நபா், எந்தவொரு ஆவணங்களையும் வழங்கவில்லை.
தில்லி காவல் துறையின் சிறப்பு பிரிவு, உளவுப் பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு முகமை ஆகியவை இணைந்து விசாரணை நடத்தியதில் அந்த அடையாள அட்டை போலியானது என்றும் அதுபோன்ற அட்டை வழங்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா் என்றனா் அந்த அதிகாரிகள்.
தொடர்புடையது
துவாரகா விரைவுச்சாலையில் எதிா் திசையில் வாகனம் ஓட்டிய நபா் மீது வழக்கு
ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஜனக்புரியில் பாதுகாப்பு அதிகரிப்பு

மனைவி, 3 மகள்களை கொலை செய்த நபா் ராஜஸ்தானில் கைது

ஜம்மு - காஷ்மீா்: பயங்கரவாதத்துடன் தொடா்புடைய 8,000 வங்கிக் கணக்குகள் முடக்கம்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


