அமேதியில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த இளைஞர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஆலம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் குமார்(35), தனது மனைவியுடன் ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலில் கௌரிகஞ்சில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தார்.
அப்போது தினேஷ் குமார் ரயிலில் கதவின் அருகே நின்று பயணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் பாபுகஞ்ச் ஐந்தி அருகே வேகமாக சென்றுகொண்டிருந்தபோது ரயிலில் இருந்து அவர் திடீரென கிழே விழுந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தினேஷ் குமார் நிகழ்விடத்திலேயே பலியானார். லக்னௌவின் வாரணாசி ரயில் பிரிவில் இந்த சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
உடல் மீட்கப்பட்டு கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் சட்ட நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் கௌரிகஞ்ச் காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
Summary
A 35-year-old man died after falling from a moving train in the Gauriganj area of Amethi district on Friday, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை, கைப்பேசி பறிப்பு: ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

இது தெரியுமா? தண்டவாளமே இல்லாமல் ஓடும் ரயில் இருக்கிறதா?

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளி உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த அஸ்ஸாம் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி




