வடக்கு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இன்று அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வடக்கு காஷ்மீரில் பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "(வடக்கு காஷ்மீர்) குப்வாராவின் நவ்காம் செக்டரில் உள்ள டிஎம்ஜி (டூட் மர் கலி) என்ற இடத்தில் நண்பகலில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் சிறிய ரக ஆயுதங்களால் சுட்டன என்று தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நின்றது என்றும் மேலும் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய செயலால் எல்லையில் பதற்றம் நிலவியது.
Summary
Pakistan violated the ceasefire along the Line of Control (LoC) in Jammu and Kashmir's Kupwara district on Friday, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹிமாசலில் சந்தேகத்திற்குரிய 'பாகிஸ்தான் பலூன்' கண்டெடுப்பு!

பிஎஸ்எல் தொடரில் பந்தைச் சேதப்படுத்திய ஃபஹர் ஸமான்..! 5 ரன்கள் பெனால்டி!

இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்!

துருக்கி மீது மீண்டும் ஈரான் தாக்குதல்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


