12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு இரண்டாவது நாளாக இன்றும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

File photo |ANI

Published On :

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு இரண்டாவது நாளாக இன்றும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் நீதிமன்ற கட்டடத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மூத்த காவல் துறை அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டு வளாகத்தில் முழுமையான சோதனை நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், சந்தேகத்திற்குரிய பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் தாமதமாகின என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். தலைமை நீதிபதி சூர்யா காந்த் ஜெய்ப்பூருக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தால் உயர்நீதிமன்ற வளாகத்தில் சற்று பரபரப்பு நிலவியது. முன்னதாக வியாழக்கிழமையும் இதேபோன்து உயர் நீதிமன்றத்திற்கு மிரட்டல் வந்தது. இதனிடையே வெள்ளிக்கிழமை மாலை ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் தலைமை நீதிபதி சூர்யா காந்த் கருத்தரங்கு ஒன்றைத் தொடங்கி வைக்க உள்ளார்.

Summary

Nothing suspicious was found, but the court proceedings were delayed due to the security exercise, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.