விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

உத்தரப் பிரதேசத்தில் பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 11:01 am IST

உத்தரப் பிரதேசத்தில் பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், காஸ்கஞ்ச் பகுதியில் உள்ள வீடு ஒன்று கடந்த மூன்று நாட்களாக பூட்டப்பட்டிருப்பதை அக்கம்பக்கத்தினர் கண்டனர். உடனே இதுகுறித்து போலீஸாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். நிகழ்விடத்துக்கு விரைந்த போலீஸார், வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர்.

வீட்டினுள் 5 பேரின் சடலங்கள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சத்யவீரின் சடலம் கயிறு ஒன்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. மீதமுள்ள நான்கு சடலங்களும் படுக்கையில் ஒரு போர்வையின் கீழ் காணப்பட்டன. தடயவியல் குழு மற்றும் மோப்ப நாய் படை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.

முதல்கட்ட விசாரணையில், சத்யவீர் தனது குடும்பத்தின் மற்றவர்களைக் கொன்றுவிட்டு பிறகு தானும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. சடலங்களை மீட்டு போலீஸார் கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மரணத்திற்கான காரணம் கண்டறிய வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் காஸ்கஞ்ச் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

In a sensational and tragic incident, a family of five was found dead in Kasganj, UP, with police suspecting murder-suicide.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.