எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

கோழிக்கோட்டில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்க மறுத்ததோடு மூன்று பேர் கொண்ட கும்பல் உணவகத்தையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

News image

கோப்புப்படம்.

Updated On :22 பிப்ரவரி 2026, 2:55 pm IST

கோழிக்கோட்டில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்க மறுத்ததோடு மூன்று பேர் கொண்ட கும்பல் உணவகத்தையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் துரித உணவகத்தில் சாப்பிட மூன்று பேர் கொண்ட கும்பல் சனிக்கிழமை இரவு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் ரூ.600 மதிப்பிலான உணவை உட்கொண்டுள்ளனர். உணவு சாப்பிட்டு முடித்ததும், உணவக ஊழியர்கள் சாப்பிட்டதற்கான ரசீதைக் கொடுத்துள்ளனர். ஆனால், அந்தப் பகுதியில் உள்ள எந்த உணவகமும் எங்களிடம் பணம் வாங்குவதில்லை என்று கூறி 3 பேரும் பணம் கொடுக்க மறுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த கும்பல் இரும்புத் தடியால் உணவகத்தைத் தாக்கியது. இதில் உணவகத்தின் பெயர்ப் பலகை மற்றும் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி அலமாரி ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் உணவக ஊழியர் ஒருவரும் காயமடைந்தார். சமீபத்தில் தொடங்கப்பட்ட உணவகத்துக்கு ஏற்பட்ட மொத்த சேதம் சுமார் ரூ.1.2 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். தப்பியோடிய மற்ற இரண்டு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களையும் கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் கடந்த காலங்களில் பல குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீஸார் மேலும் தெரிவித்தனர்.

Summary

A restaurant was allegedly vandalised by a three-member gang after it refused to pay for the food they consumed, police said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.