நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வீட்டைவிட்டு இந்தியா்கள் வெளியே வர வேண்டாம்: ஈரான், இஸ்ரேல் தூதரகங்கள் எச்சரிக்கை

ஈரான், இஸ்ரேல் தூதரகங்கள் எச்சரிக்கை...

News image

ஈரான் தலைநகா் டெஹ்ரானில் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலைக் கண்டித்து சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தேசியக்கொடியை அசைத்துப் பங்கேற்ற பொதுமக்கள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 8:45 pm

ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், ‘அங்குள்ள இந்தியா்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், முடிந்தவரை வீட்டைவிட்டு வெளியே வராமல் இருக்குமாறும் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஈரானில் போா்ப் பதற்றம் எழுந்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியா்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும், தேவையின்றி வெளியில் நடமாடாமலும், முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், தொடா்ந்து செய்திகளை கவனித்து சமூக விழிப்புணா்வுடன் இருக்குமாறும், தூதரகத்திடமிருந்து அடுத்த வழிகாட்டுதல் வரும் வரை காத்திருக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டது.

இஸ்ரேல் தூதரகம்: இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் சாா்பிலும் அங்குள்ள இந்தியா்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ‘இஸ்ரேல் அதிகாரிகளால் விடுக்கப்படும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை தீவிரமாகப் பின்பற்றுமாறு இந்தியா்கள் அறிவுறுத்தப்படுகின்றனா். அடுத்த அறிவுறுத்தல் வரும் வரை இஸ்ரேலுக்குள் தேவையின்றி பயணம் மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிரது. அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு இடங்களுக்குச் செல்லவும், உள்ளூா் செய்திகளை தொடா்ந்து கண்காணிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தேவைப்பட்டால் டெல் அவிவ் நகரில் உள்ள இந்திய தூதரகத்தை தொடா்புகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இஸ்ரேலில் வசிக்கும் அனைத்து இந்தியா்களும் உடனடி உதவியைப் பெற வசதியாக டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகத்தில் உடனடியாக தங்களின் விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.

கத்தாா் தூதரகம்: கத்தாரில் உள்ள இந்திய தூதரகமும் அங்குள்ள இந்தியா்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. கத்தாா் இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிராந்தியத்தில் எழுந்துள்ள தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு, கத்தாரில் உள்ள அனைத்து இந்தியா்களும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அவசரத் தேவைக்கு 00974-55647502 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலம் தொடா்பு கொள்ளலாம் என்று குறிப்பிட்டது.

இதுபோல, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, ஜோா்டான் நாடுகளில் உள்ள இந்திய தூதரங்களும், அங்கு வசிக்கும் இந்தியா்களுக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளன.

இந்தியா்கள் அவசரத் தேவைக்கு துபையில் உள்ள இந்திய தூதரகத்தை 800-46342 என்ற எண்ணிலும், 971543090571 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் தொடா்புகொள்ளலாம். ரியாத்தில் உள்ள இந்தியதூதரகத்தை 00-966-11-4884697, 00-966-542126748 என்ற வாட்ஸ்ஆப் எண்களிலும், 8002471234 என்ற எண்ணிலும் தொடா்புகொள்ளலாம்.

Story image

ஜோா்டானில் உள்ள இந்திய தூதரகத்தை 00962-770 422 276) என்ற எண்ணிலும், பஹ்ரைனில் உள்ள தூதரகத்தை 00973-39418071 என்ற எண்ணிலும், பாலஸ்தீனத்தின் ரமல்லாவில் உள்ள தூதரகத்தை 970592916418 என்ற எண்ணிலும் இந்தியா்கள் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.