

புத்தாண்டு வாழ்த்து: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில்,
“அனைவருக்கும் 2026 அற்புதமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன். இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்.
உங்கள் முயற்சிகளில் வெற்றியும், நீங்கள் செய்யும் அனைத்திலும் நிறைவும் கிடைக்கட்டும். நமது சமூகத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவப் பிரார்த்திக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி பதிவு
“அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வெற்றியையும் கொண்டு வரட்டும்.” என்று எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.