

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மௌசம் நூர் சனிக்கிழமை காங்கிரஸில் இணைந்தார்.
தில்லியில் கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெய்ராம் ரமேஷ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் குலாம் அகமது மிர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சுபாங்கர் சர்க்கார் ஆகியோர் முன்னிலையில் அவர் காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அப்போது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய நூரை அவர்கள் வரவேற்றனர். 46 வயதான மௌசம் நூர், 2009 முதல் 2019 வரை காங்கிரஸ் கட்சியின் சார்பில் மால்டா தொகுதியிலிருந்து இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.
ஏப்ரலில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடையும் நூர், வரவிருக்கும் மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் மால்டா தொகுதியில் இருந்து போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.