

உத்தரப் பிரதேசத்தில் நாயை வலுகட்டாயமாக மது குடிக்கவைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பத்தில் நாயை கொடுமை செய்ததோடு அதனைக் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்த நபரின் விடியோ விடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து அந்த நபரை கைது செய்ததாக போலீஸார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், விடியோவில் இளைஞர் ஒருவர் நாயை துன்புறுத்தி, மதுபான பாட்டிலில் இருந்த மதுவை கட்டாயமாக குடிக்க வைப்பது பதிவாகியுள்ளது.
விடியோ இணையதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பாக்பத் சமூக ஊடக பிரிவு மற்றும் ரமாலா காவல் நிலையம் இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு விசாரணையைத் தொடங்கின.
குற்றம்சாட்டப்பட்டவர் கிர்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா என்கிற பல்லம் என அடையாளம் காணப்பட்டார். பிறகு அவர் ஞாயிற்றுக்கிழமை ரமாலா காவல் நிலைய பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டார்.
விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.