

சிறையிலிருக்கும் உமர் காலித்துக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில் நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
தில்லி கலவரம் தொடர்பான வழக்கில் சிறையில் இருக்கும் உமர் காலித்துக்கு ஸோரான் மம்தானியின் கடிதம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேசுகையில், “பிற ஜனநாயக நாடுகளில் நீதித் துறையின் சுதந்திரத்தை மக்கள் பிரதிநிதிகள் மதிக்க வேண்டும் என்று நாங்கள் (இந்தியா) எதிர்பார்க்கிறோம். பொதுப் பொறுப்பில் உள்ளவர்கள் தனிப்பட்ட எண்ணங்களை வெளிப்படுவது கூடாது.
இதுபோன்ற கருத்துகளுக்குப் பதிலாக, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளில் கவனம் செலுத்துவது நல்லது” என்று தெரிவித்தார்.
உமர் காலித்துக்கு நியூ யார்க் மேயர் மம்தானி எழுதிய கடிதத்தில், “கசப்புணர்வு குறித்தும், அது நம்மை ஆக்கிரமிக்க விடாமல் தடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.