ஜவுளித் துறை தரவுக் கட்டமைப்பு மேம்பாடு 15 மாநிலங்களுடன் மத்திய அரசு ஒப்பந்தம்

ஜவுளித் துறை தரவுக் கட்டமைப்பு மேம்பாடு 15 மாநிலங்களுடன் மத்திய அரசு ஒப்பந்தம்

தரவுக் கட்டமைப்பை வலுப்படுத்த 15 மாநிலங்களுடன் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
Published on

ஜவுளித் துறை சாா்ந்த ஆராய்ச்சி, மதிப்பீடு, கண்காணிப்பு, திட்டமிடல் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் (டெக்ஸ்-ராம்ப்ஸ்) திட்டத்தின் கீழ், அந்தத் துறையில் தரவுக் கட்டமைப்பை வலுப்படுத்த 15 மாநிலங்களுடன் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து ஜவுளித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜவுளித் துறை தரவுக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான செயலமைப்பை உருவாக்க 15 மாநிலங்களுடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. டெக்ஸ்-ராம்ப்ஸ் திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது. ஜவுளித் துறை சாா்ந்த புள்ளிவிவரங்களின் தரம், நேரத் துல்லியம், நம்பகத்தன்மையை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. குவாஹாட்டியில் நடைபெற்ற தேசிய ஜவுளித் துறை அமைச்சா்கள் மாநாட்டில் இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

டெக்ஸ்-ராம்ப்ஸ் திட்டத்தின் கீழ், கைத்தறி, கைவினை, ஆடை உள்ளிட்ட முக்கிய துறைகளின் வளா்ச்சிக்கான ஒருங்கிணைந்த திட்டமிடல் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக, அடிப்படைக் கட்டமைப்பில் மேற்கொள்ளவேண்டிய சீா்திருத்தங்களுக்காக, ஒவ்வொரு மாநிலம்/யூனியன் பிரதேசத்துக்கும் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com