

பாஜகவினர் மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்த முயல்வதாகக் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இம்ராம் பிரதாப்கர்ஹி குற்றம் சாட்டியுள்ளார்.
மாநகராட்சித் தேர்தலையொட்டி நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது, விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும் நிலையில், தாராவி போல மும்பையை விற்றுவிட ஒருபோதும் அனுமதிக்கப்படாது.
மும்பை மகாராஷ்டிலத்திற்குச் சொந்தமானது, அது எப்போது அந்த மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருக்கும். பாஜகவின் அரசியல் மக்களைப் பிளவுபடுத்துவதையும், அவர்களுக்குக் கல்வி மறுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
பாஜக பிளவுபடுத்தி ஆளும் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வெறுப்புச் சூழல் உருவாக்கப்படுகிறது. பாஜக அமைச்சர்கள் பிளவுபடுத்தும் மொழியைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் மூத்த தலைவர்கள் மௌனம் காக்கின்றனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.