

பஞ்சாபில் நிலக்கரி அடுப்பு புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
பஞ்சாப் மாநிலத்தின் தர்ன் தரண் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி அர்ஷ்தீப் சிங் (21), அவரது மனைவி ஜஷந்தீப் கௌர் (20). இவர்களுக்கு ஒன்றரை மாதக் குழந்தையும் உள்ளது.
சனிக்கிழமை இரவு குளிரைத் தவிர்க்க அறைக்குள் நிலக்கரி அடுப்பை எரியவிட்டு இத்தம்பதியினர் தூங்கச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நிலக்கரி புகை வெளியேறும் வழி இல்லாததால் அறையினுள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
அதே அறையில் இருந்த 10 வயது குழந்தை ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர்.
நிலக்கரி புகையை அதிக அளவில் சுவாசித்ததன் காரணமாக அவர்கள் மூச்சுத்திணறி பலியாகியிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்தனர். எனினும், சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
இந்த சம்பவம் தர்ன் தரண் மாவட்டத்தில் ஹரிகே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலிபூர் கிராமத்தில் நடந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.