

ஜனநாயகன் காலதாமதம் குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு பதிலளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தி.மு.க.வை பா.ஜ.க. எதிரியாக கருதுவதால் மத்திய அரசு முதலில் பராசக்தி படத்தைத்தான் தடை செய்திருக்கும். காரணம் அந்த படத்தைத்தான் ரெட் ஜெயண்ட் வெளியீடுகிறது.
தணிக்கைச் சான்று பெறாமல் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு, பின் மத்திய அரசு மீது குற்றம் சாட்டக்கூடாது.
அனைத்திற்கும் மத்திய அரசை குறை சொல்பவர்களை ஒன்றும் சொல்ல முடியாது. என் குழந்தையே பெரிய விஜய் ரசிகர். விஜய் படம் வரவில்லை என்று நானே வருத்தப்பட்டேன். கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டது விஜய் தானே.
அதனால சிபிஐ விசாரணை நடக்கிறது. விஜய் மீது தவறு இல்லை எனில் அவர் ஆஜராகி வருவார்.
நான் திமுகவின் செய்தி தொடர்பாளர் கிடையாது. திமுக எந்தளவுக்கு மக்களை ஏமாற்றும் என்பது அனைவருக்கு தெரியும். கடந்து 5 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருகிறது. தேர்தல் வருவதால் குடும்ப அட்டைக்கு ரூ.3,000 வழங்குகிறார்கள். ஆனால் போன பொங்கலுக்கு கொடுக்கவில்லை.
அப்படியிருந்தும் நியாய விலைக் கடையில் மக்கள் பொருள்கள் வாங்கத்தான் செய்தார்கள்.
தேர்தல் நேரத்தில் ஆயிரம் பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் வேலையை திமுக பார்க்கும். ஊழல் செய்யும் கூட்டணியில்தான் காங்கிரஸ் கட்சி உள்ளது. இவ்வாறு குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.