

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் வெற்றி பெற்றிருப்பது பரபரப்பாகப் பேசப்படுகிறது.
மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தலில் வாக்குப்பதிவு முடிந்தது. மகாராஷ்டிரத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கும் தோ்தல் வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெற்றது. இன்று (ஜன. 16) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கௌரி லங்கேஷ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ரீகாந்த் பங்கார்கர் வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த 2017-இல் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டதில் ஸ்ரீகாந்த் பங்கார்கர் என்ற நபருக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் ஜால்னா முனிசிபல் கார்ப்பரேசனில் சுயேச்சையாகப் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் பங்கார்கர் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களாகக் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் தேர்தலில் போட்டியிடுவதும் வெற்றி பெறுவதும், மீண்டும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.