

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், 3 வெவ்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட்ட நிலையில் அவர்கள் அனைவரும் வெற்றி பெற்றனர்.
மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தலில் வாக்குப்பதிவு முடிந்தது. மகாராஷ்டிரத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கும் தோ்தல் வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தாணேவில் வெவ்வேறு வார்டுகளில் களமிறங்கிய பிரஹ்லாத் மாத்ரே, அவரது குடும்பத்தைச் சேர்ந்த ரேகா மாத்ரே மற்றும் ரவீன் மாத்ரே மக்களின் நம்பிக்கையை சம்பாதித்துள்ளனர்.
பிரஹ்லாத் மாத்ரே மஹாராஷ்டிர நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டார். ரேகா மாத்ரேவோ சிவசேனை கட்சி வேட்பாளராவார். ரவீன் மாத்ரே பாஜக சார்பில் போட்டியிட்டவராவார்.
தாணே முனிசிபல் கார்ப்பரேசனில் உள்ள வார்டுகளில் வேட்பாளர்களாக களமிறங்கிய மேற்கண்ட மூவரும் வெற்றி பெற்றதாக இன்று (ஜன. 16) அறிவிக்கப்பட்டதால் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியடைந்துள்ளது.
மேற்கண்ட மாத்ரே குடும்பம் மட்டுமில்லாது ஜால்கான் முன்சிபல் கார்ப்பரேசனிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை உள்ளது. அவர்கள் அனைவரும் சிவ சேனை கட்சி சார்பில் போட்டியிட்டவர்களாவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.