

ஊழல் கடவுள்கள் என்று பழி சுமத்தியதாக கர்நாடக பாஜக மீது மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் புகார் அளித்துள்ளார்.
கர்நாடகத்தின் முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை ஊழல் கடவுள்கள் என்று கர்நாடக பாஜக விமர்சித்தது.
இந்த நிலையில், தங்கள் மீதான விமர்சனம் - ஜனநாயகத்தின் வரம்பை மீறுவதாக டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுடன் டி.கே.சிவக்குமார் பேசுகையில், "அவர்கள் (பாஜக) எல்லாவற்றையும் தவறாகவே பயன்படுத்துகின்றனர். நாட்டில் எந்தவொரு கட்சிக்கோ தனிநபருக்கோ தனிப்பட்ட அல்லது அரசியல் ஆதாயத்துக்காக சட்டத்தைப் பயன்படுத்த உரிமை இல்லை.
இதனை சட்டரீதியாக நாங்கள் தீர்ப்போம். சட்டத்தை மீறும் எதனையும் செய்ய வேண்டாம் என்று கட்சி உறுப்பினர்களை எச்சரித்துள்ளோம்.
எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்படுகிறது; ஆனால், அது வரம்புகளுக்குள் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக பாஜக மீது சித்தராமையா புகாரும் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.