ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

காலம் பதில் சொல்லும்: முதல்வர் போட்டியில் சிவக்குமார்?

கர்நாடக முதல்வராக பதவியேற்பதற்கு காலம் பதில் சொல்லும் என்று துணை முதல்வர் சிவக்குமார் பேச்சு

Karnataka Dy Chief Minister D K Shivakumar

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் - கோப்புப் படம்

Published On :

கர்நாடக முதல்வராக உயர்வதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்று மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மங்களூரில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரிடம், எப்போது முதல்வராக பதவி உயர்வு பெறுவார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து டி.கே. சிவக்குமார் பேசுகையில், "மக்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நீங்கள் (ஊடகங்கள்) என அனைவருக்கும் விருப்பம் இருக்கிறது. ஆனால், கட்சி சொல்வதைத்தான் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்" என்று கூறினார்.

தொடர்ந்து, மாநில பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு அவரது முதல்வர் பதவியேற்பை எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு, "காலம்தான் பதிலளிக்கும்" என்றும் தெரிவித்தார்.

மேலும், மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா முதல்வராகப் பதவியேற்பதற்கு பட்டியலினத்தவர்கள் கோரிக்கை விடுவது குறித்த கேள்விக்கு, "இதில் என்ன தவறு இருக்கிறது. ஆதரவாளர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றனர். அவர்களை வேண்டாம் என்று நாம் கூற முடியாது" என்றும் கூறினார்.

முன்னதாக, "மாநிலத்தின் தலைமையில் எந்த மாற்றமும் இருக்காது என்பதுபோல தான் கட்சி மேலிடம் சமிக்ஞை தெரிவித்துள்ளது. ஆகையால், 5 ஆண்டுகளுக்கும் சித்தராமையாதான் முதல்வராக இருப்பார்" என்று சித்தராமையாவின் மகன் யதீந்திரா சித்தராமையா கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Time will answer when I will become CM, says D K Shivakumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.