

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை(பிப். 1) பஞ்சாப் மாநிலத்துக்குச் சுற்றுப்பயணம் செல்கிறார்.
அங்குள்ள ஆதம்பூர் விமான நிலையத்தைப் பகல் 3.45 மணிக்குப் பார்வையிடும் அவர், அந்த விமான நிலையத்துக்கு புதிய பெயர்ச்சூட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ‘ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜி விமான நிலையம்’ எனும் பெயரை அந்த விமான நிலையத்துக்குச் சூட்டுகிறார்.
பஞ்சாபில் புகழ்பெற்ற ஆன்மிக குரு, குரு ரவிதாஸ் ஜியின் 649-ஆவது பிறந்த நாளையொட்டி அன்னாரது சமூக சீர்திருத்தத் தொண்டைக் கௌரவிக்கும் பொருட்டு விமான நிலையத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து, பஞ்சாபின் லூதியாணாவில் உள்ள ஹல்வாரா விமான நிலையத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள புதிய முனையத்தையும் அவர் தொடக்கி வைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.