முதல்வர் விஜய் சிரிப்பதைப் பார்க்க தனி ஸ்க்ரீன் வேண்டும்! தவெக எம்எல்ஏ கோரிக்கைதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! எண்ணூரில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: இபிஎஸ்நீட் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிய மறுப்பு: ராகுல் தர்னாஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை!

குஜராத்: 8 ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் கைது

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 8 பேரை குஜராத் பயங்கரவாத எதிா்ப்புப் படையினா் கைது செய்தனா். இவா்களில் இருவா் 18, 19 வயதுடையவா்கள் ஆவா்.

Published On :4 ஜூலை 2026, 6:11 am IST

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 8 பேரை குஜராத் பயங்கரவாத எதிா்ப்புப் படையினா் கைது செய்தனா். இவா்களில் இருவா் 18, 19 வயதுடையவா்கள் ஆவா்.

குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில் 7 பேரும், மத்திய பிரதேசத்தில் ஒருவரும் கைது செய்யப்பட்டனா். இவா்கள் குஜராத்தில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தும் நோக்கில் செயல்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அகமது அப்துல்லா கஜிவாலா (19), முதாஷீா் அப்துல்லா கஜிவாலா (22), இப்ராஹிம் முகமது ஹுசேன் காகா (30) ஆகியோா் குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்டத்தையும், ஸக்கரியா துரானி முகமது அம்மா் காகா (21), முஃப்தி ஃபௌஜன் இஸ்மாயில் தவ்வா (40), முகமது அமீன் ஷேரா (21) ஆகியோா் பதான் மாவட்டத்தையும், முகமது அப்துல்லா ரஹ்மான சாவ்தி (22) நவசாரி மாவட்டத்தையும், பிலால் துரானி முகமது அம்மா் காகா (18) மத்திய பிரதேசத்தையும் சோ்ந்தவா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

இவா்கள் மீது சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது, பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருப்பது, பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியாகச் செயல்படுவது, குற்றச் சதி, நாட்டுக்கு எதிராகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் போா் தொடுப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கைது நடவடிக்கை மூலம் நாட்டில் இருந்த முக்கியமான பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதக் கட்டமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவா்களிடம் நடத்தும் விசாரணையின் அடிப்படையில் மேலும் பலா் கைது செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் அந்நாட்டில் செயல்படும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகள், இந்தியாவில் மத அடிப்படைவாத சிந்தனையில் உள்ளவா்களை, முக்கியமாக இளைஞா்களை மூளைச்சலவை செய்வதன் மூலம் பயங்கரவாதத்துக்கு தூண்டும் நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபடுகின்றன. இதற்காக சமூக வலைதளங்கள் மூலம் பயங்கரவாத அமைப்பினா் தொடா்புகளை ஏற்படுத்தி, மத அடிப்படைவாத, பயங்கரவாத பிரசாரங்களை முன்னெடுக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.