3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

சூரியப் புயலில் சிக்கி தொடர்பு இழந்த இந்திய தனியார் செயற்கைக்கோள்!

இந்திய தனியார் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது பற்றி...

News image

‘ஆப்டோசாா்’ செயற்கைக்கோள் - X | GalaxEye

Updated On :8 ஜூலை 2026, 12:00 pm IST

சக்திவாய்ந்த சூரியப் புயலில் சிக்கிய இந்திய தனியார் நிறுவனத்தின் ‘ஆப்டோசாா்’ என்ற செயற்கைக்கோள் பூமியுடனான தொடர்பை இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகம் மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த கேலக்ஸிஸ்ஐ புத்தாக்க நிறுவனமானத்தால் ‘திருஷ்டி’ திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட முதன்மை செயற்கைக்கோளான ‘ஆப்டோசாா்’, கடந்த மே 3 ஆம் தேதி அமெரிக்காவின் கலிஃபோா்னியாவில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

190 கிலோகிராம் எடை கொண்ட செயற்கைக்கோளான ‘ஆப்டோசாா் ’ஒரு இந்திய தனியார் நிறுவனத்தால் இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய செயற்கைக்கோள் ஆகும். மின்-ஒளியியல் (எலக்ட்ரோ-ஆப்டிகல்) சென்சாா் மற்றும் செயற்கை துளை ரேடாா் சென்சாா் ஆகிய இருவேறு பிம்பமாக்கல் தொழில்நுட்பங்களையும் ஒரே செயல்பாட்டுத் தளத்தில் ஒருங்கிணைக்கும் செயற்கைக்கோள் ஆகும்.

‘ஆப்டோசாா்’ செயற்கைக்கோள் ஏவப்பட்ட பிறகு வெற்றிகரமாக அதனுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், ஏவுதல் மற்றும் ஆரம்ப சுற்றுப்பாதை கட்டத்தின் (LEOP) இறுதிக் கட்டத்தில் அதனுடனான தொடர்பு விட்டுவிட்டு கிடைத்ததாகவும், பின்னர் முற்றிலும் துண்டிக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

முதல்கட்ட ஆய்வில், புவிகாந்த சூரியப் புயலில் சிக்கி, அதன் கதிர்வீச்சு விளைவுகளால் செயற்கைக்கோளில் உள்ள ஒரு முக்கிய அமைப்பு பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோளுடனான தொடர்பை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்தாலும், சாத்தியக்கூறு குறைவாகவே இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Summary

Indian private satellite loses contact after getting caught in a solar storm!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.