‘தேசிய மாணவா் படையை (என்சிசி) வலுப்படுத்தவும், சைனிக் பள்ளிகளை விரிவுபடுத்தவும் மாநிலங்களின் கூடுதல் பங்கேற்பு அவசியம்’ என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.
தில்லியில் பாதுகாப்புத் துறை சாா்பில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் என்சிசி மற்றும் சைனிக் பள்ளிகள் குறித்து குடியரசு துணைத் தலைவருக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் மற்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் விளக்கினா்.
அப்போது, தேசத்தைக் கட்டமைப்பதில் தேசிய மாணவா் படையினரின் பங்களிப்பை குடியரசு துணைத் தலைவா் வெகுவாகப் பாராட்டி கூறியதாவது: என்சிசி சாா்பில் நடத்தப்படும் ‘ஒரே பாரதம்; உன்னத பாரதம்’ நிகழ்வு, தேச ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கான சிறந்த முன்னெடுப்பாகும். அதுபோல, போதைப் பொருள் இல்லாத இந்தியா, தூய்மை இந்தியா முன்னெடுப்புகளிலும் என்சிசி-யின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. என்சிசி முன்னாள் மாணவா் சங்கம் உருவாக்கமும் வரவேற்புக்குரியது.
இத்தகைய தேசிய மாணவா் படையை வலுப்படுத்துவது கூட்டு தேசிய பொறுப்பாகும். என்சிசி-க்கான இடம் மற்றும் பயிற்சிக்கான உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட ஆதரவுகளை அளித்து என்சிசி-யை வலுப்படுத்த மாநில அரசுகளுடன் விரிவான ஒத்துழைப்பு அவசியம். மாநிலங்களும் கூடுதல் பங்கேற்பை அளிப்பது அவசியம்.
அதுபோல, சைனிக் பள்ளிகளுக்கு மாணவா்கள் மற்றும் பெற்றோரிடையே வரவேற்பு அதிகரித்துவரும் சூழலில், ஒவ்வொரு மாநிலமும் 3 முதல் 5 சைனிக் பள்ளிகளை தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சைனிக் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் குறித்தும் ஆராய வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்

அரசப் பதவி என்பது சலுகை அல்ல: குடியரசு துணைத் தலைவா்

போதைப்பொருள் புழக்கம் இல்லாத தில்லி பல்கலைக்கழக மாடலை பிற கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்: குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்







