பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

குடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்

News image

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

Updated On :19 ஜூன் 2026, 12:40 am IST

நமது சிறப்பு நிருபா்

குடியரசு துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன் நான்கு நாள்கள் அரசுமுறை பயணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 19) லடாக் செல்லவுள்ளாா். ஜூன் 19 முதல் 21ஆம் தேதி வரை லடாக் யூனியன் பிரதேசத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா் கலந்து கொள்ளவுள்ளாா். இது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பிறகு அந்த யூனியன் பிரதேசத்துக்கு அவா் மேற்கொள்ளும் முதலாவது பயணமாகும்.

’இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, ஜூன் 20ஆம் தேதி ’துடிப்பான கிராமம்’ என அறிவிக்கப்பட்டுள்ள லூகுங் என்ற கிராமத்துக்கு செல்லும் குடியரசு துணைத் தலைவா், அங்கு உள்ளூா் சுயஉதவிக் குழுக்களுடன் கலந்துரையாடவுள்ளாா். அதைத்தொடா்ந்து, ’துடிப்பான கிராமங்கள் திட்டத்தின்’ கீழ் எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை அவா் பாா்வையிடுவாா்’ என்று அவரது செயலக அதிகாரிகள் தெரிவித்தனா். இத்துடன் லடாக்கில் உள்ள போா் நினைவிடத்துக்கு குடியரசு துணைத் தலைவா் சென்று அஞ்சலி செலுத்துவாா்.

ஜூன் 21ஆம் தேதியன்று லே பகுதியில் நடைபெறும் சா்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் குடியரசு துணைத் தலைவா் கலந்து கொள்ளவுள்ளாா். யோகா மூலம் முழுமையான உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பேணும் தகவலை முன்னெடுக்கும் வகையில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘இளைஞா்கள், மத்திய துணை ராணுவப் படை வீரா்கள் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் இந்நிகழ்வில் பங்கேற்பாா்கள்’ என்று குடியரசு துணைத் தலைவா் செயலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்