FOLLOW US

ON GOOGLE DISCOVER

வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

பொதுவெளியில் ஆபாச படம் பார்ப்பதற்குத் தடை கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி!

பொது இடங்களில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதற்குத் தடை விதிக்கக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜூலை 2026, 9:52 pm IST

பொது இடங்களில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதற்குத் தடை விதிக்கும் வழிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பொது இடங்களில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதற்குத் தடை விதிக்கும் வழிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சமூக ஆர்வலர் பி.எல். ஜெயின் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், சிறுவர்கள் ஆபாசப் படங்களைப் பார்ப்பதைக் கட்டுப்படுத்தவும், பொது இடங்களில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதைத் தடை செய்யவும் தேசிய அளவில் செயல்திட்டம் வகுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், “இணையவழி ஆபாசப் படங்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. ஒவ்வொரு விநாடியும் 5,000 ஆபாச இணையதளங்கள் பார்க்கப்படுகின்றன. 2 கோடிக்கும் அதிகமான ஆபாச விடியோக்கள் இணையம் வழியே வெளியிடப்படுகின்றன. பரவலான இணையப் பயன்பாடு ஆபாச தளங்களை எளிதாகக் கிடைக்கும் விதத்தில் மாற்றியுள்ளது. இது அதிகப்படியான நுகர்வு மற்றும் அடிமையாதலுக்கு வழிவகுக்கிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 69A-இன் கீழ், எந்தவொரு கணினியின் மூலமாகவும் தகவல்களைப் பொது மக்கள் அணுகுவதைத் தடுக்கும் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உள்ளது” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடம் முறையான கோரிக்கை வைக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியது.

"இந்த விவகாரம் எவ்வித ஐயமுமின்றி எழுப்பப்பட்டது மிக முக்கியமானது. ஆனால், இது நீதிமன்றத்தின் ஆய்வுக்குத் தேவைப்படும் சட்டரீதியான கேள்விகளை இது உள்ளடக்கவில்லை. மேலும், இது தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நிபுணர்களின் பரிசீலனை தேவைப்படும் கொள்கை சார்ந்த விவகாரமாகும். இந்த விவகாரம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்குள் வருகின்றது," என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

Summary

Plea seeking a ban on watching pornographic content in public spaces: Supreme Court dismisses it!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.