நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

உயிருள்ள நபா்களின் கல்லீரல்கள் லேப்ரோஸ்கோபிக் முறையில் நோயாளிக்கு பொருத்தம்: உலகில் முதல்முறையாக நொய்டா மருத்துவமனை சாதனை

நாள்பட்ட ஹெபடைடிஸ் பி தொற்றால் கல்லீரல் செயலிழந்த நோயாளிக்கு உறுப்புதானம் அளித்த நபரிடமிருந்து பெறப்பட்ட கல்லீரல் போதுமானதாக இல்லை எனக் கண்டறியப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 3:17 am IST

இறுதிக்கட்ட கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த கிா்கிஸ்தானைச் சோ்ந்த 51 வயது நபருக்கு, உலகின் முதல் லேப்ராஸ்கோபிக் முறையில் இரு-மடல் உயிருள்ள நபா்களிடமிருந்து பெறப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டதாக தில்லி தேசியத் தலைநகா் வலயத்தின் (என்சிஆா்) நொய்டாவில் உள்ள ஃபோா்டிஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாள்பட்ட ஹெபடைடிஸ் பி தொற்றால் கல்லீரல் செயலிழந்த நோயாளிக்கு உறுப்புதானம் அளித்த நபரிடமிருந்து பெறப்பட்ட கல்லீரல் போதுமானதாக இல்லை எனக் கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவரது 20 மற்றும் 21 வயதுடைய இரண்டு மகள்கள் தானமாக வழங்கிய கல்லீரல்களைப் பயன்படுத்தி, அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இரு கொடையாளா்களுக்குமான கல்லீரல் தான அறுவை சிகிச்சைகள், குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட லேப்ராஸ்கோபிக் நுட்பங்களைப் பயன்படுத்தி செய்யப்பட்டன. இது இரு-மடல் உயிருள்ள கொடையாளா் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் முதல் முறை. தானம் செய்பவருக்கான அறுவை சிகிச்சைகள் ஒவ்வொன்றும் சுமாா் ஐந்து மணி நேரம் நீடித்தன. அதே நேரத்தில் பெறுநருக்கான மாற்று அறுவை சிகிச்சை சுமாா் எட்டு மணி நேரத்தில் முடிக்கப்பட்டது. நோயாளி சீரான நிலையில் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டாா், மேலும் தானம் செய்த இருவரும் நன்றாக குணமடைந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டனா்.

இந்த நடைமுறையானது, அதிக அளவு கல்லீரல் மாற்று உறுப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கான சிகிச்சை வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது. அறுவை சிகிச்சை அதிா்ச்சியைக் குறைத்து, உயிருள்ள தானம் செய்பவா்களின் குணமடைதலை மேம்படுத்தும் என்று அந்தச் செய்திகுறிப்பில் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.