
ஏழுமலையான் தரிசனத்துக்கு பக்தர்கள் 30 மணிநேரம் காத்திருப்பு!
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தர்ம தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருப்பது தொடர்பாக...

ஏழுமலையான் கோயில் - கோப்புப்படம்
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தர்ம தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருக்கின்றனர்.
திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து வெளியே உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனர். தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 30 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு சுமார் 5 முதல் 6 மணி நேரம் ஆகிறது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் நள்ளிரவு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் உணவு, குடிநீர், குடி, காபி, பால் ஆகியவற்றை வழங்கி வருகிறது.
இதற்கிடையே, வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 63,556 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 35, 900 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.5.31 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4.12 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
Summary
Devotees wait 30 hours for darshan of Lord Venkateswara...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








