இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஏழுமலையான் தரிசனம்: 30 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்தனா்.

ஏழுமலையான் கோயில்

Published On :12 ஜூலை 2026, 1:03 am IST

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து வெளியே உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் பாச்சி கால்வாய் கங்கம்மா கோயில் அருகில் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 30 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் நள்ளிரவு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 73,178 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 39,690 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 4.26 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.