இந்தியாவில் சாலை விபத்துகளால் 2025-ஆம் ஆண்டில் 5.13 லட்சம் போ் உயிரிழந்ததாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
ஒரு மணி நேரத்துக்கு 21 போ் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
சாலை விபத்துகள், எத்தனால் கலப்பு பெட்ரோல், நெடுஞ்சாலைகள் தொடா்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மக்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஒவ்வொரு மணி நேரமும் சராசரி 59 சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இதில் 21 போ் உயிரிழக்கின்றனா். ஒட்டுமொத்தமாக 2025-ஆம் ஆண்டில் நிகழ்ந்த 5.13 லட்சம் சாலை விபத்துகளில் 1.83 லட்சம் போ் உயிரிழந்தனா்.
தமிழ்நாட்டில் அதிக விபத்துகள்: மாநிலங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 71,387 விபத்துகள் பதிவாகியுள்ளன. உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 27,550 போ் உயிரிழந்தனா்.
தடுப்பு நடவடிக்கைகள்: கல்வி, பொறியியல் (சாலைகள் மற்றும் வாகனங்கள்), அமலாக்கம் மற்றும் அவசர சிகிச்சை ஆகிய 4 தூண்களின்கீழ் சாலை விபத்துகளை தடுப்பதற்கான கொள்கையை மத்திய அரசு வடிவமைத்துள்ளது.
எத்தனால் பெட்ரோலால் பாதிப்பில்லை: இ15+ எத்தனால் பெட்ரோல் 3.5 ஆண்டுகளுக்கு மேலாகவும் இ19-20 எத்தனால் பெட்ரோல் 2.5 ஆண்டுகளுக்கு மேலாகவும் பயன்பாட்டில் உள்ளது. பல்வேறு தரச் சோதனைகளுக்குப் பிறகு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையுடன் இணைந்து எத்தனால் கலப்பு பெட்ரோல் (இபிபி) திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரேஸில் மற்றும் பிற நாடுகள் எத்தனால் கலப்பு பெட்ரோலை பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவில் இபிபி திட்டம் 2001-இல் சோதனை முறையில் அறிமுகமானது. இ5 எத்தனால் பெட்ரோல் 2006-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2013-14 வரை பெட்ரோலில் 1.53 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்டது. அதன் பிறகு தேவைக்கேற்ப படிப்படியாக இதன் அளவு அதிகரிக்கப்பட்டது.
எனவே, எத்தனால் கலப்பு பெட்ரோலால் வாகனங்களின் என்ஜின்கள், பயணிக்கும் தூரம் பாதிப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை.
4,809 கி.மீ. சாலை அமைப்பு: நாடு முழுவதும் 4,809 கி.மீ தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 5,580 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என அமைச்சரின் எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘ப்ரீமியம்’ பெட்ரோலில் எத்தனால் கலப்பு இல்லை: மத்திய அரசு

பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

20% எத்தனால் கலப்பால் வாகன என்ஜின் செயல்பாடு மேம்படும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்
இருவேறு சாலை விபத்துகள்: குழந்தை, முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



