கரப்பான் பூச்சி கட்சியினர் வைக்கிங் பாணியில் போராட்டத்தில் ஈடுபட்ட செயல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தேசிய தேர்வு முகமை நடத்தும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு உள்பட பல தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி கட்சியினர் அமைதிப் பேரணி நடத்தினர்.
நாடாளுமன்ற சாலையில் நுழையும்போதே, காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். மாணவர்கள், பெண்கள் உள்பட பலரின் மீதும் தடியடி நடத்தினர்.
இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவிய நிலையில், போராட்டத்தின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் நார்வேயைச் சேர்ந்த வைக்கிங்ஸ் வீரர்கள் போன்று செய்த சைகைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
the iconic Norway Viking Row being done at the student protest in India pic.twitter.com/L8OWmO2WRK
— sohom (@AwaaraHoon) July 23, 2026
முன்னதாக, சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நார்வே அணி வீரர்கள், ’வைக்கிங்ஸ் ரோ’ என்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வெற்றிக்குப் பின்னர் திடலில் இருந்த ரசிகர்கள் மட்டுமின்றி நார்வே முழுவதும் ரசிகர்கள் பொதுவெளியில் ‘வைக்கிங்ஸ் ரோ’ வெற்றிக் கொண்டாட்டத்தைச் செய்தனர். கால்பந்து மைதானத்தில் நார்வே அணி வீரர்கள் வரிசையாக படகிற்கு துடுப்புப் போடுவதைப் போன்று அமர்ந்து கொண்டனர்.
எர்லிங் ஹாலண்ட் ரசிகர்களின் முரசை வாங்கி அணி வீரர்களின் முன்னர் நின்றுகொண்டு அடித்த போது, அணியின் வீரர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களும் ‘ரோ, ரோ’ என சத்தமிட்டுக் கொண்டே படகிற்கு துடுப்பு செலுத்துவதைப் போன்று வெற்றியைக் கொண்டாடியிருந்தனர். ‘ரோ’ என்றால் நார்வீஜியன் மொழியில் ‘துடுப்பை செலுத்துதல்’ என்று கூறப்படுகிறது.
காலிறுதியில் இங்கிலாந்து அணியுடன் தோற்ற நார்வே அணியில் போட்டியிலிருந்து வெளியேறியிருந்தாலும், வைக்கிங் ரோ கொண்டாட்டம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நார்வே வீரர்கள் போன்று வழக்கமாக ரோ... ரோ... என்று கத்துவதற்குப் பதிலாக ‘பதவி விலகு... பதவி விலகு...’ என்று கோஷமிட்டனர். மேலும், அவர்கள் மழையையும் பொருள்படுத்தாமல் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
Summary
The students in Mumbai, who are part of the CJP protests, decided to use the Norway football team's iconic Viking Row as a medium to voice their concerns in Mumbai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










