தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! தொடரும் அமளி! நாடாளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடிகிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

பிரதமர் பதிலில் திருப்தியில்லை... தர்மேந்திர பிரதான் விலகும் வரை போராட்டம் தொடரும்! சிஜேபி

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமரின் நடவடிக்கை போதுமானது இல்லை என சிஜேபி கூறுவது பற்றி..

News image

அசுதோஷ் ரங்கா - X

Updated On :23 ஜூலை 2026, 12:57 pm IST

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் மோடியின் நடவடிக்கையில் திருப்தியில்லை, பொறுப்புக்கூறல் என்ற முக்கிய அம்சத்தைக் கையாளவில்லை எனக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவில்,

வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு நீதிமன்றங்களை அமைப்பதாக அவர் பதிவிட்டுள்ளார். நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமரின் எக்ஸ் பதிவுக்கு எதிர்வினையாற்றும் வகையில், சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே,

ஹாய் என் பெயர் ஒன்றுமில்லை என்ற வாசகத்துடன் பிரதானின் படத்தைப் பகிர்ந்துகொண்டு, மத்திய கல்வி அமைச்சர் கட்டாயம் பதவி விலக வேண்டும்.

சிஜேபியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா கூறுகையில்,

ஒன்றரை மாதக் கால போராட்டங்களுக்குப் பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியான வினாத்தாள் கசிவுகளுக்குப் பின்னணியில் உள்ள முக்கிய கேள்விக்கு இதில் பதில் இல்லை என்றும் கூறினார்.

ஒருவிதத்தில் ஒன்றரை மாதக் கால போராட்டங்களுக்குப் பிறகு பிரதமர் இறுதியாக இதைக் கவனித்திருப்பது நல்ல விஷயம். ஒருவேளை அவர் வெளிநாட்டுப் பயணங்கள் முடித்து இந்தியா திரும்பியிருக்கலாம்.

ஆனால், வினாத்தாள் கசிவு ஏற்கெனவே நடந்த பிறகு நீங்கள் என்ன தண்டனையை விதிக்கப் போகிறீர்கள்? அது வினாத்தாள் கசிவுப் பிரச்னையைத் தீர்க்கப் போவதில்லை. வினாத்தாள் கசிவுகள் ஏன் நடக்கின்றன என்பதுதான் உண்மையான கேள்வி. அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கப்பட வேண்டும்.

காயம் ஏற்பட்ட பிறகு மருந்து பூசுவது ஒரு விஷயம், ஆனால் காயமே ஏற்படாமல் தடுப்பதுதான் உண்மையான போராட்டம்.

அமைப்பை நிர்வகிப்பவர்களிடம் பொறுப்புக்கூறலோ அல்லது திறமையோ இல்லாத காரணத்தாலேயே இந்தப் பாதிப்பு தொடர்ந்து ஏற்படுகிறன. எனவே, இந்த நடவடிக்கைகள் எந்த வகையிலும் போதுமானவை அல்ல என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பொதுமக்களின் கோபம் இப்போது பிரதமர் நரேந்திர மோடியை நோக்கித் திரும்பியுள்ளதாகவும், போராட்டக்காரர்கள் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை நாங்கள் ஜந்தர் மந்தரை விட்டு நகரமாட்டோம்.

கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையைத் தாண்டி, இந்தப் போராட்டம் இப்போது மத்திய அரசின் தலைமைக்கு எதிராகத் தீவிரமடைந்து வருகின்றது. மக்கள் இப்போது நேரடியாகப் பிரதமரிடமே கேள்விகளைக் கேட்கத் தொடங்கியுள்ளதால், மத்திய அரசு இதனைப் புரிந்துகொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

சிஜேபி அமைப்பின் தலைமையிலான இந்தப் போராட்டம் ஜூன் 20-ஆம் தேதி தொடங்கியது. போட்டித் தேர்வுகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்துப் பொறுப்புக்கூறல், கல்வி முறையில் சீர்திருத்தங்கள், கல்வி அமைச்சர் பதவி விலகல் ஆகிய கோரிக்கைகளை இந்த போராட்டம் வலியுறுத்துகிறது.

The Cockroach Janta Party (CJP) on Thursday said Prime Minister Narendra Modi's announcement on action against paper leaks did not address the issue of accountability and reiterated its demand for Union Education Minister Dharmendra Pradhan's resignation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.