குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!
/

திக் திக் நிமிடங்கள்! கீழே 3,500 அடி பள்ளம்.. ஜிப்லைனில் தொங்கிய பயணி!

திக் திக் நிமிடங்கள் கீழே 3,500 அடி பள்ளம் ஜிப்லைனில் தொங்கிய பயணியை மீட்ட பணியாளர்கள்.

News image

ஜிப்லைனில் தொங்கிய பயணி - from video grab

Updated On :31 ஜூலை 2026, 6:36 pm IST

மகாராஷ்டிரத்தின் தோரன்மால் என்ற மலைப் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்ட ஜிப்லைனில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, 3500 அடி பள்ளம் கொண்ட இடத்தில் சிக்கிய பயணியை, அதன் பணியாளர் மீட்ட விடியோ வைரலாகி வருகிறது.

மூணாறு போன்ற மலை சார்ந்த சுற்றுலாத் தலங்களில், ஒரு மலையின் மேலிருந்து மற்றொரு மலைக்கு ஜிப் லைனில் செல்லும் சாகச பயணங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் தனியாகவும், அருகருகே அமைந்திருக்கும் ஜிப்லைனில் ஜோடியாகவும் சென்று திரும்பலாம்.

இதுபோன்று, மகாராஷ்டி மாநிலம் நந்தூர்பார் மாவட்டம், தோரன்மால் மாலையில் சீதாகாய் பாயிண்ட் என்ற இடத்தில் திறக்கப்பட்ட ஜிப்லைனில் சுற்றுலா பயணி ஒருவர் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கிட்டத்தட்ட 3500 அடி பள்ளம். மேலே ஜிப் லைனில் சென்று கொண்டிருந்த பயணி, திடீரென ஜிப் லைன் நின்றுவிட்டதால் செய்வதறியாது திகைத்தார். தொழில்நுட்பக் கோளாறு சரி செய்தால்தான் மலையை அடைய முடியும் என்று சொல்லிவிட்டால் என்னாவது என்று அவர் நினைத்திருக்கலாம்.

ஆனால், ஜிப் லைனை இயக்கிக் கொண்டிருந்த பணியாளர்கள் உடனடியாக பாதுகாப்பு உபகரணங்கள் உதவியோடு, அதே ஜிப் லைனில் வந்து, பயணியை பத்திரமாக மீட்டு மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், இனி வாழ்நாளில் ஜிப் வைத்த டி-ஷர்ட் கூட அணிய மாட்டோம் என்றுக் கூறிக் கொண்டு தெறித்து ஓடினர்.

எனினும், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதும் உடனடியாக தாமதிக்காமல், தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் சாமர்த்தியமாக பயணியை மீட்ட பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன. இந்த கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் கேட்டறியப்பட்டு வருகிறது.

Summary

Tourist Rescued After Zipline Gets Stuck Over 3,500 Foot Gorge

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.