குவைத் விமான நிலையத்தின் மீதான ஈரானிய படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டவர் இந்தியர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் கெஷ்ம் தீவின் மீது அமெரிக்க படைகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) அன்று தாக்குதல் நடத்தின.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, குவைத்திலுள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தின. இதில், குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஈரானிய படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட அந்த நபர் இந்தியாவைச் சேர்ந்தவர் என குவைத்திலுள்ள இந்தியத் தூதரகம் இன்று (ஜூன் 3) அறிவித்துள்ளது.
இதுபற்றி, குவைத்திலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“இன்று குவைத் விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஓர் இந்தியர் துயரமான முறையில் உயிரிழந்ததற்கு இந்தியத் தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரில், வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
one of the individuals killed in the attack by Iranian forces on Kuwait Airport was an Indian national.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல்
குவைத் மீதான ஈரானின் தாக்குதலில் இந்தியர் பலி! மத்திய அரசு கண்டனம்!

ஈரான் தாக்கிய சில மணிநேரங்களில்! குவைத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்!

ஈரான் தாக்குதலில் உருக்குலைந்த குவைத் விமான நிலையம்! ஒருவர் பலி!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




