தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

அமெரிக்காவுக்குப் பதிலடி! குவைத், ஜோர்டான் மீதான ஈரானின் தாக்குதல் தீவிரம்!

குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் மீதான ஈரானிய படைகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன...

News image

ஈரான் அரசுக்கு ஆதரவாக தெஹ்ரானில் திரண்ட மக்கள்... - ஏபி

Updated On :18 ஜூலை 2026, 4:33 pm IST

அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக குவைத், ஜோர்டான் ஆகிய நாடுகளின் மீதான ஈரானின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இருதரப்பும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இதில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்த நிலையில், ஜோர்டானின் கட்டமைப்புகளை நோக்கி கடந்த 24 மணிநேரத்தில் ஈரானிய படைகள் ஏவிய 4 ட்ரோன்கள் அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரானிய தாக்குதல்களால் இதுவரை எந்தவொரு பொருள் மற்றும் உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை என ஜோர்டான் ராணுவம் கூறியுள்ளது.

ஆனால், குவைத் நாட்டிலுள்ள எண்ணெய் உற்பத்தி கட்டமைப்புகள் மீதான ஈரானின் தாக்குதல்கள் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் இருந்து படுகாயமடைந்தவர்கள் வெளியேற்றப்பட்டு அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக, குவைத் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பிப்.28 அன்று தொடங்கிய போரானது கடந்த ஜூன் மாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால், மீண்டும் தற்போது தொடங்கிய போரானது அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

attacks on Kuwait and Jordan have intensified in retaliation for the attacks by the United States.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.