நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தில்லியில் தலாய் லாமாவுக்கு மருத்துவ சிகிச்சை!

தில்லியில் தலாய் லாமாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவது குறித்து...

News image

தலாய் லாமா - ஏபி

Updated On :4 ஜூன் 2026, 3:40 pm IST

திபெத்திய புத்த மதத்தின் தலைமை மதகுருவான தலாய் லாமா மருத்துவ சிகிச்சைக்காக தில்லிக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திபெத்திய புத்த மதத்தின் தலைமை மதகுருவான தலாய் லாமாவுக்கு, கடந்த 2025 ஆம் ஆண்டு அமெரிக்காவில் முழங்கால் மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் வசித்து வரும் தலாய் லாமாவின் இடதுபுற முழங்காலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அவர் நாளை (ஜூன் 5) தில்லிக்குச் செல்வதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சைகள் நிறைவடைந்ததும் இம்மாத இறுதியில் தலாய் லாமா லடாக்கிற்குப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், தனது 91 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு லே நகரத்தில் வரும் ஜூலை 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் தலாய் லாமா பங்கேற்பதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

முன்னதாக, திபெத்தின் ஆன்மீகத் தலைவராகக் கடந்த 1940 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வரும் 14 ஆம் தலாய் லாமா, 1959 ஆம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்தது முதல் இந்தியாவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Dalai Lama is traveling to Delhi for medical treatment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.