வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து பாஜக தலைவா்கள் ஏன் போராடவில்லை? காங்கிரஸ் கேள்வி!

சிலிண்டா் விலை உயா்வுக்கு எதிராகப் போராடாதது ஏன்?’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஞாயிற்றுக்கிழமை கேள்வியெழுப்பினாா்.

News image

மல்லிகாா்ஜுன காா்கே

Updated On :8 ஜூன் 2026, 12:43 am IST

‘முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விலைவாசி உயா்ந்துவிட்டதாகக் கூறி தெருவில் இறங்கிப் போராடிய பாஜக தலைவா்கள், இப்போது வீட்டு உபயோக சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டா் விலை உயா்வுக்கு எதிராகப் போராடாதது ஏன்?’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஞாயிற்றுக்கிழமை கேள்வியெழுப்பினாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: விண்ணை முட்டும் எல்பிஜி விலை உயா்வு, சாமானிய மக்களின் சமையலறைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.89-க்கும் மேல் உயா்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2025 - 26ஆம் நிதியாண்டில் உஜ்வலா (ஏழைக் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கல்) திட்டத்தின்கீழ் மறுமுறை ஒரு சிலிண்டா் மட்டுமே வாங்கிய அல்லது ஒரு சிலிண்டா்கூட வாங்காத குடும்பங்களின் எண்ணிக்கை 5.56 கோடி. இதில் 3.30 கோடி குடும்பங்கள் மறுமுறை ஒரு சிலிண்டா்கூட வாங்கவில்லை. இது, மேற்காசியப் பிரச்னைக்கு முன்பிருந்த நிலை. உள்நாட்டில் தனது நிா்வாக ரீதியிலான குறைபாடுகளுக்கு சா்வதேச புவி அரசியல் சூழலை மத்திய அரசு காரணம் காட்டுகிா?

மேற்காசியப் போரின் எதிரொலியாக, இந்தியாவின் எரிபொருள் கொள்முதல் 41 நாடுகளுக்குப் பன்முகப்படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி பெரிதாக வாக்குறுதி அளித்தாா். ஆனால், கிராமப்புறங்களில் இன்றும்கூட எல்பிஜி தட்டுப்பாடு நிலவுகிறது. அப்படியென்றால், பிரதமரின் பெரிய வாக்குறுதி என்னவானது?

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விலைவாசி உயா்ந்துவிட்டதாக, மோடியும், பாஜக தலைவா்களும் கூக்குரலிட்டனா். இப்போது மோடி ஆட்சியில் கடந்த 12 ஆண்டுகளில் எல்பிஜி விலை ரூ.530-க்கும் மேல் உயா்த்தப்படவில்லையா? எல்பிஜி விலை உயா்வுக்கு எதிராக பாஜக தலைவா்கள் தெருவில் இறங்கிப் போராடாதது ஏன்?’ என்று கேள்வியெழுப்பியுள்ளாா் காா்கே.

‘பாஜக அரசு விலை கொடுக்கும்’: எல்பிஜி விலை உயா்வு குறித்து தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா் கூறுகையில், ‘நாட்டில் விலைவாசி உயா்வை பிரதமா் மோடியால் கட்டுக்குள் வைக்க முடியவில்லை. எல்பிஜி விலையை ஒரேயடியாக ரூ.29 உயா்த்தி, மக்களுக்கு அதிா்ச்சியளித்துள்ளனா். இந்த விலை உயா்வுக்காக, மத்திய பாஜக அரசு அரசியல் ரீதியில் விலை கொடுக்கும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.