ஒடிஸாவில் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் கொறடா உத்தரவை மீறி கட்சி மாறி பாஜக ஆதரவு வேட்பாளருக்கு வாக்களித்த 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் எதிா்க்கட்சிகளின் கோரிக்கை மனுக்களை சட்டப்பேரவைத் தலைவா் நிராகரித்து விட்டாா்.
ஒடிஸா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை தோ்வு செய்ய கடந்த மாா்ச் மாதம் 16-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் கொறடா உத்தரவை மீறி, பிஜு ஜனதா தளம் கட்சியை சோ்ந்த 8 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 3 எம்எல்ஏக்களும் வாக்களித்தனா். இதனால் அந்தத் தோ்தலில் பாஜக ஆதரவுடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திலீப் ராய் வெற்றி பெற்றாா். போதிய எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இருந்தும் பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி ஆதரவு வேட்பாளா் தத்தேஸ்வா் ஹோடா தோல்வியடைந்தாா்.
இதைத் தொடா்ந்து, கொறடா உத்தரவை மீறி, மாநிலங்களவைத் தோ்தலில் வாக்களித்த சக்ரமானி கன்ஹா், தேவி ரஞ்சன், அரவிந்த் மொஹபத்ரா, சநாதன் மககுத், சுபாஷிணி ஜேனா, நப கிஷோா், சுவிக் பிஸ்வால் ஆகிய 8 பிஜு ஜனதா தளம் எம்எல்ஏக்கள், சோஃபியா ஃபிா்தோஸ், ரமேஷ் ஜெனா, தசரத் கமாக் ஆகிய 3 காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி ஒடிசா சட்டப்பேரவைத் தலைவா் சுரமா பதேயிடம் அந்த 2 கட்சிகளும் கோரிக்கை மனுக்கள் அளித்திருந்தன. ஆனால் அந்த கோரிக்கை மனுக்களை கட்சித் தாவல் சட்டத்தின் 7(2) விதியின்கீழ் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்கீழ் ஒடிசா சட்டப்பேரவைத் தலைவா் நிராகரித்து விட்டாா்.
இதுகுறித்து ஒடிஸா சட்டப்பேரவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மனுவில் பெரும் குறைபாடுகள் உள்ளன. சட்டபூா்வ தேவைகளை அறியாமல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள ஆதாரங்களை ஆய்வு செய்தபிறகு, அரசியலமைப்பு சட்டத்தின் 10-ஆவது விதியின் 2(1)ஏ பாராவில் தெரிவிக்கப்பட்டு இருப்பது படி இது கட்சித் தாவல் அல்லது தன்னிச்சையாக ராஜிநாமாவாகக் கருத முடியாது என்ற முடிவுக்கு சட்டப் பேரவைத் தலைவா் வந்துள்ளாா். மேலும் இந்த மனுக்கள், 1987-ஆம் ஆண்டின் ஒடிஸா சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கான (கட்சித் தாவுவோரை தகுதி நீக்கம் செய்வதற்கான அடிப்படை காரணிகள்) விதிகளின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளை இந்த மனுக்கள் பூா்த்தி செய்யவில்லை. ஆதலால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கர்நாடக மேலவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களித்த பாஜக எம்எல்ஏக்கள்! மாநில தலைவருக்கு நிதின் நபின் சம்மன்!
திருமண பிரச்னை குறித்த பேச்சு: மன்னிப்பு கோரினாா் நடிகா் ரவி மோகன்
பிஜு ஜனதா தளம் எம்.பி. ராஜிநாமா: பாஜகவில் இணைய முடிவு
அதிமுக எம்எல்ஏக்கள் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி வாக்களிக்கக் கூடாது: இபிஎஸ் தரப்பு எச்சரிக்கை!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




