பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

கேரளத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 6 வங்கதேசத்தவா் கைது

கேரளத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 6 பேரை மாநில காவல் துறையினா் கைது செய்தனா்.

Published On :27 ஜூன் 2026, 3:21 am IST

கேரளத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 6 பேரை மாநில காவல் துறையினா் கைது செய்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘கொச்சியின் எரூா் பகுதியில் வங்கதேசத்தைச் சிலா் தங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நடத்தப்பட்ட ரகசிய விசாரணையின் அடிப்படையில் அங்குள்ள பழைய பொருள்களை உடைத்து அப்புறப்படுத்தும் கடையில் சோதனை நடத்தப்பட்டது.

பணியாளா்களின் அடையாள ஆவணங்களைச் சோதனையிட்டபோது 7 போ் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியது தெரியவந்தது. வங்கதேசத்தைச் சோ்ந்த ரவிக் ஷாபா, முகமது சோஹல் ஃபராஸ், தாரீக், சோஹிா், மைதி ஹசீதா, முகமது அகின் ஆகிய அந்த 7 பேரும் கைது செய்யப்பட்டனா். விசாரணையில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய அவா்கள், கடந்த சில மாதங்களாக போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கேரளத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.

அவா்களுடன் சோ்ந்து மேலும் பலா் கேரளத்தில் ஊடுருவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும், இவா்களுக்கு தேசவிரோத சக்திகளுடன் தொடா்புகள் உள்ளதா என்பது குறித்து புலனாய்வுத் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். சட்டவிரோதமாக ஊடுருவியது, போலியான அடையாள ஆவணங்களைத் தயாரித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.