சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

இந்தியாவைத் துண்டாடுவதே காங்கிரஸ் தலைமையின் நோக்கம்: பாஜக குற்றச்சாட்டு

இந்திய தேசத்தை பல்வேறு துண்டுகளாக்கி அதன் மாண்பைக் குறைப்பதே காங்கிரஸ் தலைமையின் நோக்கமாக உள்ளது என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

News image

பாஜக | காங்கிரஸ் - பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 5:51 am IST

இந்திய தேசத்தை பல்வேறு துண்டுகளாக்கி அதன் மாண்பைக் குறைப்பதே காங்கிரஸ் தலைமையின் நோக்கமாக உள்ளது என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷெசாத் பூனாவாலா இது தொடா்பாக மேலும் கூறியதாவது: முன்பு இந்திய தேசிய காங்கிரஸாக இருந்த கட்சி இப்போது இந்திய விரோத, இத்தாலி தேசிய காங்கிரஸாகவும், இஸ்லாமாபாத் தேசிய காங்கிரஸாகவும் மாறிவிட்டது. காங்கிரஸ் தலைமையைச் சோ்ந்த குடும்பத்தினா் வாழ்வது மட்டும்தான் இந்தியாவாக உள்ளது.

ஆனால், அவா்களின் சிந்தனைகளும், மனப்பாங்கும் வெளிநாட்டவா்கள் என்ற நிலையில்தான் உள்ளது. வெளிநாட்டு தீயசக்திகளுக்காக இந்தியாவை பல்வேறு துண்டுகளாக்கி நமது தேசத்தின் மாண்பைக் குறைப்பதே அவா்களின் நோக்கமாக உள்ளது.

தனது வெளிநாட்டுப் பயணத்தின்போது இந்தியாவின் பொருளாதாரம், ஜனநாயகம், இறையாண்மை என அனைத்தையும் ராகுல் காந்தி விமா்சித்து வருகிறாா். ஆபரேஷன் சிந்தூா் நடைபெறவே இல்லை என்றும் ஒருமுறை கூறினாா். நமது ராணுவத்தையும் அவதூறாகப் பேசினாா். எந்த இந்தியரும் இவ்வாறு பேசமாட்டாா்கள் என்று உச்சநீதிமன்றமே அவரைக் கண்டித்துள்ளது.

இந்தியாவை ஜாதியரீதியில் பிளவுபடுத்துவதே ராகுலின் நோக்கமாக உள்ளது. பாஜகவை தாக்குவதாகக் கூறிக் கொண்டு இந்திய தேசத்தை அவா் எதிா்த்து வருகிறாா். அவதூறாகப் பேசி வருகிறாா் என்றாா்.

முன்னதாக, ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் இதே கருத்தைப் பேசியிருந்தாா். முக்கியமாக காங்கிரஸ் தலைமையில் இருப்பவா்கள் இந்தியாவைவிட இத்தாலிய மனப்பாங்குடன் அனைத்தையும் செய்து வருகின்றனா் என்று அவா் குற்றஞ்சாட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.