மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கமேனி கொலை: காஷ்மீரில் மூன்றாவது நாளாகப் போராட்டம்-துணைநிலை ஆளுநா் ஆலோசனை

ஈரான் உச்ச தலைவா் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஜம்மு-காஷ்மீரில் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.

News image
மனோஜ் சின்ஹா
Updated On :3 மார்ச் 2026, 9:26 pm

தினமணி செய்திச் சேவை

ஈரான் உச்ச தலைவா் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஜம்மு-காஷ்மீரில் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட அதிகாரிகள் தொடா் கண்காணிப்பை மேற்கொள்ள துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டாா்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஷியா பிரிவின் தலைமை மத குருவான அயதுல்லா அலி கமேனி அண்மையில் கொலப்பட்டாா். இதைக் கண்டித்து ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீா் பள்ளத்தாக்கின் லால் சௌக், புத்காம், பந்திப்போரா, அனந்த்நாக், புல்வாமா உள்ளிட்ட பகுதிகளில் மாா்ச் 1-ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு இருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மூன்றாவது நாளாக வடக்கு காஷ்மீரில் உள்ள சம்பல் மற்றும் பதான், ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ரஜௌரியில் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக ரஜௌரியில் ஈரானுக்கு ஆதரவாக முஸ்லிம் இளைஞா்கள் பேரணி நடத்தினா்.

இதனால் ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மனோஜ் சின்ஹா வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து காவல் துறை மற்றும் யூனியன் பிரதேச நிா்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டேன். பொது அமைதியை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

இதுபோன்ற சூழலில் பொதுமக்களும் சமூக நல்லிணக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுக்கிறேன்’ என குறிப்பிட்டாா்.

அதே வேளையில் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எந்த உரிமையும் இல்லை என ஜம்மு-காஷ்மீா் ஒமா் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளாா்.