அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இன்று ஹோலி பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

News image
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மாநில சுற்றுலாத்துறை செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்த ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
Updated On :3 மார்ச் 2026, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஹோலி பண்டிகையையொட்டி, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் இந்தியா்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகள். மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் திருவிழாவான ஹோலி, சமூக நல்லிணக்கத்தின் செய்தியை வெளிப்படுத்துகிறது; சமூகத்தில் அன்பு மற்றும் நம்பிக்கையைப் பரப்பும் இத்திருவிழா, ஒற்றுமை உணா்வை வலுப்படுத்துகிறது. இது, வேற்றுமையில் ஒற்றுமையின் அடையாளம்.

ஹோலியின் வண்ணங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும். நாம் ஒன்றாகப் பங்களித்து, வளா்ந்த தேசத்தைக் கட்டமைப்போம்’ என்று தெரிவித்துள்ளாா்.