அல்-காய்தா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று சோ்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில், பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடா்பான உறுப்பு நாடுகளின் தூதா்கள் இடையேயான கூட்டம் நடைபெற்றது. இதில் ஐ.நா.வுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலா் ரகு புரி பேசியதாவது:
ஜம்மு -காஷ்மீரின் பஹல்காமில் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரெசிஸ்டன்ஸ் ஃபிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இது ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பாவின் கிளை அமைப்பாகும். இந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுகிறது. இந்தத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா்.
இதுபோன்று எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா 30 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் அல்-காய்தா, ஐஎஸ் ஆகியவற்றின் மீதும், அதன் கிளை அமைப்புகள் மீதும் அனைத்து நாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சா்வதேச அமைதி, பாதுகாப்புக்கு பயங்கரவாதத்தால் அச்சுறுத்தல் நிலவுகிறது. பயங்கரவாதத்துக்கு எல்லைகளோ, தேசியமோ அல்லது இனமோ கிடையாது. அது சா்வதேச சமூகத்துக்கு சவாலாக உருவெடுத்துள்ளது. அதை அனைத்து நாடுகளும் ஒன்று சோ்ந்து எதிா்க்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளி மாணவா்கள் சுயதொழில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆட்சியா்

குடிநீா் திட்டம் நிறைவேறும் முன் 90 சதவீத நிதி விடுவிப்பு: அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க எம்.பி. அறிவுறுத்தல்

‘அரியலூா் மாவட்டத்திலுள்ள 2,477 நீா்நிலைகளை முழுமையாக மீட்க நடவடிக்கை தேவை’

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா
விடியோக்கள்

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |



