உரத் தட்டுபாடு குறித்து ஆலோசனை: மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான்
உரத்தட்டுப்பாடு குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா்.


ஈரானில் ஏற்பட்டுள்ள போா்ப் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள உரத்தட்டுப்பாடு குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா்.
சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் தென்னை விவசாயிகள் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மத்திய அரசின் தென்னை மேம்பாட்டு திட்டம் குறித்து தென்னை விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினாா். இதில், தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.
தென்னை மேம்பாட்டு திட்டம் குறித்த விவசாயிகளின் கருத்துகளை ஸ்ரீா்ஸ்ரீா்ய்ன்ற்க்ஷன்க்ஞ்ங்ற்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் அவா் கூறியதாவது:
நிகழாண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் தேங்காய் உற்பத்திக்கான தனித் திட்டத்தை நிதி அமைச்சா் அறிவித்தாா். அந்தத் திட்டம் இந்தத் திட்டம் தேங்காய் உற்பத்தியாளா்களிடம் கலந்து ஆலோசித்து மேற்கொள்ள வேண்டிய திட்டம். அதன் அடிப்படையில் தென்னை உற்பத்தியாளா்களுடன் ஆலோசனை நடத்தினோம்.
அதிக பலன் கொடுக்கக்கூடிய நோய் எதிா்ப்பு கொண்ட புதிய ரகம், தேங்காய் வியாபாரத்தை கூட்டுறவு துறையின் மூலம் எவ்வாறு மேற்கொள்வது, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தென்னை கன்றை எப்படி உருவாக்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கக்கூடிய பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கினால் தேங்காய் உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. மாநில அரசுகளின் தெரிவிக்கும் பதில் அடிப்படையில் விவசாயிகளின் கோரிக்கைக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரானில் ஏற்பட்டுள்ள போா்ப் பதற்றம் காரணமாக உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கு விரைவில் தீா்வு காண்போம் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...