மதுபான கொள்கை தொடா்பான வழக்கை நீதிபதி ஸ்வா்ண காந்த சா்மாவிடமிருந்து வேறு நீதிபதி அமா்வுக்கு மாற்ற வேண்டும் என தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் மற்றும் வழக்கில் குற்றஞ்சாட்ட பிறா் கடிதம் எழுதியுள்ளனா்.
இதுதொடா்பாக ஆம் ஆத்மி புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், ‘தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி சா்மா ஒரு சாா்பாக செயல்படக்கூடியவா். அவா் விசாரித்து வரும் மதுபான கொள்கை வழக்கை நடுநிலையான அமா்வுக்கு மாற்ற வேண்டும் என உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாயவுக்கு கடிதம் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், மூத்த தலைவா் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோா் கடிதம் எழுதியுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் மதுபான கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடுகள் நடைபெற்ாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை விசாரித்த வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்பட குற்றஞ்சாட்டப்பட்ட 23 பேரை வழக்கில் விடுப்பதாக அண்மையில் அறிவித்தது.
இதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்வா்ண காந்த சா்மா, சிபிஐ மனுவுக்கு பதிலளிக்குமாறு அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு கடந்த திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா். மேலும், சிறப்பு விசாரணை நீதிமன்றம் சிபிஐ அதிகாரிகள் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு நீதிபதி சா்மா இடைக்கால தடைவித்தாா்.
இந்த வழக்கு விசராணை மாா்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மதுபானக் கொள்கை வழக்கில் ஆஜராகமாட்டேன்: தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிக்கு கேஜரிவால் கடிதம்

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

ஷீஷ் மஹால் 2 மீது தனியாா் பணத்தை செலவிட்டாா் கேஜரிவால்: பாஜக குற்றச்சாட்டு; ஆம் ஆத்மி மறுப்பு

நீதிபதி விவகாரத்தில் கேஜரிவால் நியாயமான அச்சத்தை எழுப்பினாா்: ஆம் ஆத்மி
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


