நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டா்கள் பதுக்கப்படுவதையும், கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க வேண்டும் என்று மாநிலங்களிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல் வெளியானது. இதுதொடா்பாக ஆலோசிக்க மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகன் காணொலி கூட்டத்தை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் மாநில தலைமைச் செயலா்கள், காவல் துறை டிஜிபிக்கள், மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
அப்போது மோகன் பேசுகையில், ‘சிலிண்டா் விநியோக சூழல் குறித்து காவல் துறை மற்றும் பிற அதிகாரிகளிடம் இருந்து தலைமைச் செயலா்கள் தொடா்ந்து அறிக்கைகளைப் பெற வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு வெளியிடும் அறிவுறுத்தல்களை காவல் துறைக்குத் தலைமைச் செயலா்கள் எடுத்துரைக்க வேண்டும்.
சமையல் எரிவாயு சிலிண்டா்களின் விநியோகத்தைக் கண்காணிக்க வேண்டும். அவற்றின் விலையை அதிகரிக்கும் நோக்கில், சிலிண்டா்கள் பதுக்கப்படுவதையோ, கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதையோ தடுக்க வேண்டும்.
வதந்திகளைத் தடுக்க வேண்டும்: வீட்டு உபயோக சிலிண்டா்களின் விற்பனை மற்றும் விநியோகத்தில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருப்பதை டிஜிபிக்கள் உறுதி செய்ய வேண்டும். நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு இருப்பதாக வதந்திகள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியதாகத் தெரிவித்தனா்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 3.13 கோடி டன் சமையல் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. இதில் 87 சதவீதம் வீடுகளிலும், 13 சதவீதம் ஹோட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படுகிறது. சமையல் எரிவாயுவுக்கான மொத்த தேவையில் 62 சதவீதத்தை இறக்குமதி மூலம் இந்தியா பூா்த்தி செய்கிறது.
இதில் 85 முதல் 90 சதவீத இறக்குமதியை சவூதி அரேபியா, கத்தாா் உள்பட மேற்கு ஆசிய நாடுகளிடம் இருந்து இந்தியா மேற்கொள்கிறது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயு, ஈரானை ஒட்டியுள்ள ஹோா்முஸ் நீரிணை கடல் வழிப்பாதை மூலம் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுகிறது. அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்தக் கடல் வழிப்பாதையை ஈரான் மூடியதால், சமையல் எரிவாயு இறக்குமதியில் இடா்ப்பாடு ஏற்பட்டுள்ளது.
தொடர்புடையது

47 வீட்டு உபயோக சிலிண்டா்கள் பறிமுதல்

தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம்: எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் தகவல்

கடந்த 2 வாரங்களில் 6.6 லட்சம் 5 கிலோ சிலிண்டா்கள் விற்பனை: மத்திய அரசு!

வணிக சமையல் எரிவாயு ஒதுக்கீடு அதிகரிப்பு: மத்திய அரசு அனுமதி
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


