கடந்த 2 வாரங்களில் நாடு முழுவதும் உள்ள எல்பிஜி சமையல் எரிவாயு விநியோக மையங்களில் 6.6 லட்சம் 5 கிலோ சிலிண்டா்கள் விற்பனை செய்யப்பட்டதாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
ஹோா்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல்கள் பயணிப்பதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளபோதிலும் எல்பிஜி சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படுவதாகவும் மத்திய எண்ணெய் அமைச்சகம் தெரிவித்தது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த ஏப்.4-ஆம் தேதி மட்டும் 90,000 இலவச வணிக சிலிண்டா்கள் (எஃப்டிஎல்) எனப்படும் 5 கிலோ எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விற்பனை செய்யப்பட்டன. மாா்ச் 23-ஆம் தேதியில் இருந்து எல்பிஜி சமையல் எரிவாயு மையங்களில் 6.6 லட்சம் சிலிண்டா்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஒரு நாளைக்கு சராசரியாக 51 லட்சம் 14.2 கிலோ எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதில் 95 சதவீதம் இணைய வழியில் முன்பதிவு செய்யப்படுகிறது.
சிலிண்டா்களை பதுக்கும் விநியோக மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து 50,000 சிலிண்டா்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 1,400 எல்பிஜி சமையல் எரிவாயு விநியோக மையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு 36 விற்பனையாளா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
நாட்டில் வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் எல்பிஜி சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

47 வீட்டு உபயோக சிலிண்டா்கள் பறிமுதல்

தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம்: எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் தகவல்

சேமிப்பு மையங்களில் எல்பிஜி சிலிண்டா் நேரடி விற்பனைக்குத் தடை! தில்லி அரசு உத்தரவு!

வணிக வாடிக்கையாளா்களுக்கு நிபந்தனைகளுடன் 70 சதவீத எல்பிஜி எரிவாயு ஒதுக்கீடு
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


