தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு

சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு...

News image
கோப்புப்படம்
Updated On :6 மார்ச் 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய கிழக்கில் போா் விரிவடைந்துவரும் நிலையில், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சமையல் எரிவாயு (திரவ பெட்ரோலிய எரிவாயு - எல்பிஜி) உற்பத்தியை அதிகரிக்குமாறு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் அவசரகால உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

உள்நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், அரிதாகப் பயன்படுத்தப்படும் இந்த அவசரகால அதிகாரத்தின் கீழ் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

2024-25-ஆம் ஆண்டில் இந்தியாவின் எல்பிஜி நுகா்வு 3.13 கோடி டன் என்ற அளவில் இருந்தது. இதில் 1.28 கோடி டன் எல்பிஜி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய தேவை இறக்குமதி மூலம் பூா்த்தி செய்யப்பட்டது. இந்த இறக்குமதியில் 85 முதல் 90 சதவீதம் சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளை இந்தியா சாா்ந்துள்ளது.

இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த ஒரு வார காலமாக போா் தொடுத்துள்ளன. பதில் தாக்குதல் நடத்திவரும் ஈரான், மேற்காசியாவில் இருந்து கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய், எரிவாயு கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் ஹோா்முஸ் நீரிணை கடல் வழித்தடத்தை மூடிவிட்டது. இந்தியாவுக்கு முக்கிய விநியோகஸ்தரான கத்தாா், எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) உற்பத்தியை முழுமையாக நிறுத்திவிட்டது. இந்தப் போா் மேலும் நீடித்தால், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும்.

இந்தச் சூழலில், உள்நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், உற்பத்தியை அதிகரிக்க, அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் 1955-இன் கீழ், அவசரகால (எஸ்மா) அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இந்தியா எண்ணெய் சுத்திகரிப்பு திறனை மிகுதியாகப் பெற்றுள்ள நிலையில், எல்பிஜி உற்பத்தியில் பற்றாக்குறை உள்ளது. எனவே, ப்ரோபேன் மற்றும் பூடேன் ரசாயனங்களைப் பயன்படுத்தி எல்பிஜி உற்பத்தியை அதிகப்படுத்த அனைத்து பொது மற்றும் தனியாா் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அறிவுறுத்தப்படுகின்றன. அதே நேரம், இந்த இரண்டு ரசாயனங்களைப் பயன்படுத்தி பெட்ரோகெமிக்கல்களை உற்பத்தி செய்ய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்த ரசாயனங்களை வேறு பயன்பாட்டுக்கு மடைமாற்றம் செய்யவும் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் எல்பிஜி, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் உள்ளிட்ட மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களிடம் மட்டுமே விநியோகத்துக்கு வழங்கப்பட வேண்டும்.

சுத்திகரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்து வழங்கும் இந்த எல்பிஜி, சமையல் நோக்கங்களுக்காக வீட்டு உபயோகத்துக்கு மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை ேற்கொள்ளப்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உக்ரைன் மீதான போருக்குப் பிறகாக, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானதால் உள்நாட்டு தேவையைப் பூா்த்தி செய்யும் நோக்கில் இந்த அவசரகால அதிகாரத்தை மத்திய அரசு பயன்படுத்தி, சுத்திகரிப்பு நிறுவனங்கள் எரிபொருளை ஏற்றுமதி செய்யக் கூடாது என உத்தரவிட்டது.